DemTalk is a free, web-based communication toolkit to help improve interactions involving people living with Dementia (PLWDs).

This multilingual version was developed in collaboration with linguists from the University of Malaya and Newcastle University, UK, the Alzheimer’s Disease Foundation Malaysia (ADFM), family caregivers and professionals involved in care provision for people living with dementia. 

The original English version was produced by teams of stakeholders including communication researchers, technology designers, health and social care experts, carers and people living with dementia in a project facilitated by experts from Newcastle University, Barchester Healthcare and Cardiff and Valleys National Health Service Trust and the Alzheimer’s Society UK.

டிமென்சியாவும் தொடர்பாடலும்

மூளைப்பகுதியின் சேதத்தால் ஏற்படும் டிமென்சியாவால் ஒருவரின் திறன்களும் ஆற்றலும் தொடர்பாடலும் பாதிப்படைகின்றன.

பொதுவாக இது நாளுக்கு நாள் மோசமடைகின்ற ஒரு நோயாகும். ஞாபக மறதி, கவனம் செலுத்துவதில் சிரமம், புரிதலிலும் தொடர்பாடலிலும் சிக்கல்கள் ஆகியவை இந்த நோய்க்குரிய அறிகுறிகளில் அடங்கும்.

டிமென்சியாவின் தொடக்க காலத்தில் இருப்பவர் பெரும்பாலும் தங்கள் நினைவாற்றலிலும் தங்களால் எளிதில் செய்யக்கூடிய பணிகளைச் செய்வதிலும் சிக்கல்களை அறிவார்கள்.

நினைவாற்றல் சிக்கல்கள் என்பன முதுமையின் இயல்பான அறிகுறி, ஆனால் அவை வழக்கமான பணிகளைச் செய்வதற்குப் பெரும் சிரமமாகவும் வருத்தம் ஏற்படுத்துவதாகவும் அல்லது இயலாத காரியம் எனவும் நினைப்பர்.

தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய போராடும் நிலையில், டிமென்சியா உடையவர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த அறிகுறிகளை மறைக்க முயலலாம். அவர்களுக்குப் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றோடு அச்சமோ எரிச்சலோ ஏற்படலாம். இவை அனைத்தும் அடிப்படையான சூழல்களைச் சமாளிப்பதைக் கடினமாக்கும்.

நோய் மோசமடையும் பொழுது, இந்த உணர்வுகள் மாறலாம் அல்லது வேறு வடிவங்களை ஏற்கலாம். அறிவாற்றல் சிதைவால் ஒருவரின் ஆளுமையும் நடத்தையும், பெரும்பாலும் பராமரிப்பாளர்கள் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ கடினமாக உணரும் அளவுக்குத் தீவிர மாற்றம் ஏற்படலாம்.

டிமென்சியா உடையவர்கள் தங்கள் அடையாளத்தை இழந்ததாக உணரலாம்; உளரத் தொடங்குவர் அல்லது பேசுவதை முற்றாக நிறுத்திக் கொள்வர்; நாட்டமின்றியும் துலங்காமலும் இருப்பர்.

பெரும்பாலும் டிமென்சியா என்பது கவலைக்குரியது என்றாலும், அவர்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டிய உரிமைபெற்றிருப்பதால், டிமென்சியா உடையவர்களின் ஆற்றலையும் தகுதியையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அவர்களைச் சுற்றி இருப்பவர்கள், இந்நோயின் பாதிப்பினால் ஏற்படும் உணர்வு எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்வதோடு, அவர்களின் சிக்கல்களுக்கும் விருப்பங்களுக்கும் உதவும் வழிமுறைகளைப் பின்பற்றி, அவர்களின் மரியாதையைக் காக்க வேண்டும்.

டிமென்சியா உடையவர்கள் அவர்களின் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் கவலைகளைக் குறைத்துக்கொள்ளவும் இது உதவ வேண்டும். அவர்கள் எதிர்க்கவோ தணிந்து போகவோ, தன் நிலைமையை பொருட்படுத்தாத நிலையிலோ, தாம் மதிக்கபடுவதாகவும் நேசிக்கப்படுவதாகவும் திருப்திகொள்ளும் மனநிலையைத் தக்கவைக்கவும் இது அனுமதிக்கிறது.

நீங்கள் ஒரு குடும்பப் பராமரிப்பாளரா?

ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துகள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்

Dr. Leela Koranleelako@um.edu.my

Close Menu