உங்களைவிட வேறு யாராலும் டிமென்சியா உடையவர்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், அவர்களுடன் உங்களையும் கவனித்துக் கொள்வது சிரமமாக இருக்கலாம்.

இங்கு உங்களுக்கு நாங்கள் வழங்குவது யாதெனில், நீங்கள் அவர்களோடு மிகச் சிறப்பான வாழ்க்கை வாழ உதவும் ஆலோசனை ஆகும்.

குடும்பப் பராமரிப்பாளர்

முன்னுரை

டிமென்சியா உடையவர்கள், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், அவர்களோடு உரையாடுபவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் இந்த வழிகாட்டி துணை செய்யும்

டிமென்சியா உரையாடல் கருத்துகளை அனுப்புவதிலும் பெறுவதிலும் பாதிப்பை எற்படுத்தலாம். தொடர்புத் திறன்களின் கோளாறு, ஒருவரையொருவர் தவறாகப் புரிந்துகொள்ளும் சூழலை உருவாக்கலாம் அல்லது அவர்களுக்கிடையே சிக்கல்களையோ தவறான எண்ணங்களையோ ஏற்படுத்தலாம்.

இணைந்து உரையாடுவதற்கு நடைமுறை ஆலோசனையை டெம்டோக் (DemTalk) வழங்குகிறது.

இந்த வழிகாட்டி உருவாக்கத்திற்குப் பங்காற்றிய, நிபுணத்துவம் வாய்ந்த துறைசார் வல்லுனர்களிடமிருந்தும் பிற பராமரிப்பாளர்களிடமிருந்தும் அல்லது டிமென்சியா உடையவர்களோடிருந்தும் என பலரது சிறந்த ஆலோசனைகளைச் சேகரித்ததன் வாயிலாக இவ்வழிகாட்டி இவ்வாறு செயல்படுகிறது.

மூளைப்பகுதியின் சேதத்தால் ஏற்படும் டிமென்சியாவால் ஒருவரின் திறன்களும் ஆற்றலும் தொடர்பாடலும் பாதிப்படைகின்றன.

பொதுவாக இது நாளுக்கு நாள் மோசமடைகின்ற ஒரு நோயாகும். ஞாபக மறதி, கவனம் செலுத்துவதில் சிரமம், புரிதலிலும் தொடர்பாடலிலும் சிக்கல்கள் ஆகியவை இந்த நோய்க்குரிய அறிகுறிகளில் அடங்கும்.

டிமென்சியாவின் தொடக்க காலத்தில் இருப்பவர் பெரும்பாலும் தங்கள் நினைவாற்றலிலும் தங்களால் எளிதில் செய்யக்கூடிய பணிகளைச் செய்வதிலும் சிக்கல்களை அறிவார்கள்.

நினைவாற்றல் சிக்கல்கள் என்பன முதுமையின் இயல்பான அறிகுறி, ஆனால் அவை வழக்கமான பணிகளைச் செய்வதற்குப் பெரும் சிரமமாகவும் வருத்தம் ஏற்படுத்துவதாகவும் அல்லது இயலாத காரியம் எனவும் நினைப்பர்.

தங்கள் அன்றாடப் பணிகளைச் செய்ய போராடும் நிலையில், டிமென்சியா உடையவர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த அறிகுறிகளை மறைக்க முயலலாம். அவர்களுக்குப் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றோடு அச்சமோ எரிச்சலோ ஏற்படலாம். இவை அனைத்தும் அடிப்படையான சூழல்களைச் சமாளிப்பதைக் கடினமாக்கும்.

நோய் மோசமடையும் பொழுது, இந்த உணர்வுகள் மாறலாம் அல்லது வேறு வடிவங்களை ஏற்கலாம். அறிவாற்றல் சிதைவால் ஒருவரின் ஆளுமையும் நடத்தையும், பெரும்பாலும் பராமரிப்பாளர்கள் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ கடினமாக உணரும் அளவுக்குத் தீவிர மாற்றம் ஏற்படலாம். டிமென்சியா உடையவர்கள் தங்கள் அடையாளத்தை இழந்ததாக உணரலாம்; உளரத் தொடங்குவர் அல்லது பேசுவதை முற்றாக நிறுத்திக் கொள்வர்; நாட்டமின்றியும் துலங்காமலும் இருப்பர்.

பெரும்பாலும் டிமென்சியா என்பது கவலைக்குரியது என்றாலும், அவர்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டிய உரிமைபெற்றிருப்பதால், டிமென்சியா உடையவர்களின் ஆற்றலையும் தகுதியையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அவர்களைச் சுற்றி இருப்பவர்கள், இந்நோயின் பாதிப்பினால் ஏற்படும் உணர்வு எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்வதோடு, அவர்களின் சிக்கல்களுக்கும் விருப்பங்களுக்கும் உதவும் வழிமுறைகளைப் பின்பற்றி, அவர்களின் மரியாதையைக் காக்க வேண்டும்.

டிமென்சியா உடையவர்கள் அவர்களின் வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் கவலைகளைக் குறைத்துக்கொள்ளவும் இது உதவ வேண்டும். அவர்கள் எதிர்க்கவோ தணிந்து போகவோ, தன் நிலைமையை பொருட்படுத்தாத நிலையிலோ, தாம் மதிக்கபடுவதாகவும் நேசிக்கப்படுவதாகவும் திருப்திகொள்ளும் மனநிலையைத் தக்கவைக்கவும் இது அனுமதிக்கிறது.

டெம்டோக் (DemTalk) நுட்பமான அல்லது மிகவும் குழப்பமான மொழியைக் கொண்டதல்ல – தேவைப்படும் எவருக்கும் பயன்படவும் பயனுள்ளதாக இருப்பதற்கும் உருவாக்கப்பட்டது.

இது உறுதியான ‘வழிமுறைகளை’ மட்டும் பட்டியலிடவில்லை மாறாக, பிறரால் பகிரப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க முயல்கிறது.

இந்த வழிகாட்டி, அவர்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி, வாழ்க்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை வழங்கி உதவுகிறது. டிமென்சியா உடையவர்கள் முதலில் மனிதர்கள் அடுத்ததாகத்தான் நோயாளிகள் என்பதை உணர்வது முக்கியம்.

சிறந்த ஆலோசனைகள் கூட எப்பொழுதும் எல்லோருக்கும் பொருந்தாது – எனவே ஒருவரின் தனித்துவத்தை மதிப்பதுதான் சிறந்த ஆலோசனை ஆகும்.  உங்களுக்குப் பயன் தராத நிலையில், இந்த வழிகாட்டியின் வழிகாட்டலைப் பொருட்படுத்தாமல், உங்கள் அனுபவங்களுக்குப் பொருந்துகின்ற வழிகளைக் கண்டறிய தயாராக இருங்கள்.

இந்த வழிகாட்டியை உருவாக்கியவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு, டிமென்சியா உடையவர்கள் அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்கும் நண்பர்களுடனும் உலகத்துடனும் அவர்கள் அதிகமாக மகிழ்ந்திருக்கவும், பயன்மிக்க வகையில் தொடர்பாடச் செய்வதற்குமே ஆகும். அவர்களும் நாமும் இதற்குத் தகுதி உடையவர்களே.

இதில் ஒன்பது பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றும் தொடர்பாடல், இணைந்து செயலாற்றுதல் ஆகியவற்றோடு தொடர்புடைய கூறுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு பிரிவும் அந்தந்தத் துறைசார்ந்த ஆலோசனையை வழங்குகிறது. சில ஆலோசனைகளை வெவ்வேறு சூழலில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுவதற்கு, டிமென்சியா உடையவர்கள், அவர்களின் பராமரிப்பாளர்கள் ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்களை இந்த வலைப்பக்கத்தின் கதைப் பிரிவு எடுத்துக்காட்டுகளாக வழங்குகிறது.

இந்த வழிகாட்டியின் முழுமையான, மேலும் நுட்பமான பதிப்பில் உங்களுக்கு நாட்டமிருந்தால், வலைப்பக்கத்தின் சமூகப் பராமரிப்பாளர்களும் உடல்நல நிபுணர்களும் எனும் பகுதியிலும் பெறலாம். இந்த முழுமையான பதிப்புகள், வழிகாட்டியின் வழிமுறைப் பின்னணியை ஆழமாக விளக்குவதோடு, பொதுவாக விரிவான ஆலோசனையையும் குறிப்பாக உடல்நல நிபுணர்களுக்கு வழங்குகிறது.

இந்த வழிகாட்டியில் மீதமுள்ள ஒன்பது பிரிவுகள்:

2.1 உரையாடல்

2.2 மொழிசாரா தொடர்பாடல்

2.3 சுற்றுச்சூழல்

2.4 பதற்றத்தைக் குறைத்தல்

2.5  அவர்கள் நிலையில் நின்று பார்த்தல்

2.6  நடத்தைகளைப் புரிந்துகொள்ளல்

2.7 அவர்களே அவர்களை அறிந்து கொள்ள உதவுங்கள்

2.8 புரிதலைச் சரிபார்த்தல்

2.9 உங்களை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்

தொடர்பாடல் ஆலோசனை

உரையாடல்

 • நீங்கள் டிமென்சியா உடையவர்களாக இருந்தால், தொடர்பாட போராடுவது எப்படி இருக்கும் என்றும் எது உதவக்கூடும் – கடந்த காலத்தில் எது உதவியது என்றும் சிந்திக்க முயலுங்கள்.

 • உரையாடல் என்பது அன்புகாட்டுதல் – நீங்கள் வெறுமனே அரட்டையடிக்கவில்லை, ஒருவரையொருவர் மனிதர்களாக ஏற்றுக்கொள்கிறீர்கள்.

 • இயன்றவரை இயல்பாகத் தொடர்பாடுங்கள். ஆனால், உரையாடலை வழிநடத்தவும் தேவைப்பட்டால் வழிப்படுத்தவும் தயாராக இருங்கள்.

 • நீங்களோ டிமென்சியா உடையவர்களோ  ஈடுபட்டுள்ள நடவடிக்கைகளைப் பற்றி கலந்துரையாடுவது பெரும்பாலும் நல்ல தொடக்கமாகும்.

 • டிமென்சியாவோடு வாழ்பவர்களுடன் நீங்கள் நீண்ட கலந்துரையாடலை மேற்கொள்வது உரையாடலின் முக்கியக் கூறாகும் – இறுதியில் அடைய வேண்டிய இடத்தை அடைந்து விட்டதாக அறிவீர்கள்.

 • ஒரு நாளின் பொழுது முக்கியமானதாக இருக்கலாம் – எடுத்துக்காட்டாக, டிமென்சியா உடையவர்கள் சிலருக்குக் காலையிலேயே முதல் வேலையாக உரையாடுவதும் சிலருக்கு இரவில் உரையாடுவதும் சுலபமாக இருக்கும்,

 • எரிச்சல் அடையும்பொழுது, முடிந்தால் விலகிச் சென்றுவிடுங்கள் – இது யாருக்கும் உதவாது.

 • அவர்கள் மீது உங்களின் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள்.
 • நீங்கள் மெதுவாகப் பேசுவதோடு பதிலுக்குக் காத்திருக்கவும் தயாராக இருங்கள். அவகாசம் தேவைப்படும் கருத்து உருவாக்கத்திற்கு அவர்களுக்கு வழிவிடுங்கள். (அவர்களைச் சிந்திக்கவிடுங்கள், இது தாமதமாகலாம்). டிமென்சியா உடையவர்கள் தங்கள் எண்ணங்களைச் சேகரிக்க வேண்டும் என்று எப்பொழுதும் கூறுவார்கள் – அவ்வாறு எண்ணங்களைச் சேகரித்தும் சொல்ல விரும்புவதைச் சொல்லும் முன்பே கலந்துரையாடல் தொடர்ந்துவிடுவது அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது
 • உங்களிடம் கூறும் அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். அவை குழப்பம் தருவதாக இருந்தால், அவர்கள் கூற நினைத்தது என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, “வீட்டிற்குச் செல்லலாமா” என்று கேட்டால், அவர்கள் கவலையாகவும் பதற்றமாகவும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
 • தொனியில் கவனம் செலுத்துங்கள் – இது நாம் அனைவரும் தொடர்பாடும் முறையின் ஒரு முக்கியக் கூறாகும்.
 • டிமென்சியா உடையவர்களுக்குத் தவறான வழிகாட்டலாக இல்லாத போதும், அவர்கள் கணநேரம் வாழ்வதாக நம்பும் உலகில் நுழைவது சில வேளைகளில் சரியாக அமையலாம். எடுத்துக்காட்டாக, அவருக்கு அறிமுகமான நண்பரைப் போல பதிலளியுங்கள். இதுவே நல்ல தீர்வு!
 • அவர்களின் நடத்தையில் குறிப்புகளைத் தேடுவதோடு அவர்கள் கூற நினைத்ததற்குரிய உணர்வைப் பெற முயலுங்கள்
 • ஒருவர் வெளிப்படையாகப் பேசுவதை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், அதை விளக்குவது கடினமென அறிந்தாலும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளோம்.
 • வியப்படையவும் கற்றுக்கொள்ளவும் தயாராக இருங்கள். வசதியாக உணர்வதாலும் அவகாசம் வழங்குவதாலும், அளவான திறன்களைக் கொண்டவர்களும் திறம்பட தொடர்பு கொள்ளவர்.
 • இயன்றவரை நேர்மறையானவற்றில் கவனம் செலுத்துங்கள்; அவர்கள் செய்யவதற்குக் கடினமானவற்றைக் காட்டிலும், செய்ய கூடியவற்றைக் கேளுங்கள்
 • மெதுவாகப் பேசுங்கள் – டிமென்சியா உடையவர்களுக்கு விரைவான பேச்சில் கவனம் செலுத்த கடினமாக இருக்கலாம். இயன்றவரை எளிய சொற்களையும் வாக்கியங்களையும் பயன்படுத்துங்கள் – ஒரே நேரத்தில் பல கருத்துகளை விவாதிக்க வேண்டாம்.
 • நீங்கள் சொன்னதையும் உங்களிடம் சொல்லப்பட்டதையும் சிந்திப்பதோடு அவர்களைப் புண்படுத்தாத வகையில் நேர்மையாகப் பதிலளியுங்கள்.
 • செவிட்டுத்தன்மையோ பிற தொடர்பாடல் சிக்கல்களோ உங்கள் சூழ்நிலைக்குப் பொருந்தலாம். தேவைக்கேற்ப சத்தமாகப் பேசுங்கள், முடிந்தால் உங்கள் உதட்டு அசைவுகளை அவர்கள் பார்க்கும்படி பேசுங்கள். சைகைகளைப் பயன்படுத்துவது இயல்பாக இருப்பதோடு பெரும்பாலும் உதவுகிறது.
 • நீங்கள் பல முறை சொன்னவற்றைப் பரிசீலனை செய்வதற்குத் தயாராக இருப்பதோடு கேள்விகளை வெவ்வேறு முறையில் மாற்றி அமைக்கவும் தயாராக இருங்கள் – தொடர்பாடல் நீங்கள் எதிர்பார்க்காத முறையில் அமைந்தால், கவலைகொள்ள வேண்டாம். எதுவாக இருந்தாலும் கேளுங்கள். ஆனால்,  “மன்னிக்கவும், நீங்கள் சொன்னது எனக்குப் புரியவில்லை” என்று சொல்லவும் தயாராக இருங்கள்.
 • எடுத்துக்காட்டுகளையோ படங்களையோ சுட்டிக்காட்டுவது சில நேரங்களில் உதவலாம்
 • பெரும்பாலும் டிமென்சியா உடையவர்கள் ஒரு கருத்தைச் சுற்றி வளைத்து விளக்க முற்படுவதால், அவற்றைப் புரிந்து கொள்ள சற்றுத் தாமதமாகலாம். சில வேளைகளில், அவர்கள் சொன்ன கருத்தைப் புரிந்துகொள்ள இயலாமலும் போகலாம்.
 • இயன்ற வரை நகைச்சுவை உணர்வோடு இருங்கள். பொதுவாக மனிதர்கள் தங்களைப் பார்த்துச் சிரிப்பதை விரும்புவதில்லை. ஆனால், பெரும்பாலும் சேர்ந்து சிரிப்பதையே விரும்புகிறார்கள்.
 • பொதுவாக, எவரையும் தவறாக வழிநடத்துதல் சரியல்ல. ஆனால், எப்பொழுதுமே உண்மையை வலியுறுத்துவதும் சாத்தியமன்று. எனவே, சில வேளைகளில் மாற்றுவழி உதவலாம். எடுத்துக்காட்டாக, யாராவது தம் தாயைப் பார்க்க விரும்பினால், “உங்கள் அம்மா விரைவில் வருவார்” என்று ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையிலோ; “உங்கள் அம்மா இறந்துவிட்டார்” என்று எவ்விதத்திலும் உதவாத, அதே வேளையில் கவலை தரக்கூடிய வகையிலோ சொல்வதைவிட “அம்மாவுடன் இருந்தால், நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள்?” எனச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
 • ஒரு விவாதத்தின் முடிவில், நீங்கள் புரிந்துகொண்டதையும், அடுத்து என்ன செய்வீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.

நோக்குதல், முகபாவனைகள், சைகைகள், தொடுகை, உடல் இருக்கைநிலை ஆகியவை உடல்மொழியில் அடங்கும் முக்கியக் கூறுகள் ஆகும்.

நாம் தொடர்புகொள்ள பயன்படும் இந்தக் கூறுகள், பெரும்பாலும் வாய்மொழித் தொடர்பின் அத்தனை தகவல்களையும் தாங்கிவரும். வாய்மொழி தொர்பாடலில் சிக்கல்களை எதிர்நோக்குபவர்களாலும், இந்த மொழிசாரா தொடர்பாடலின் குறியீடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

 • பிறரை அவசரப்படுத்தாமலும் தணிந்தும் இருங்கள் – இது அவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது.

 • தேவைப்படும்பொழுது சிரிப்பதோடு பொருத்தமான சூழலில் நம்பிக்கை தரும் வகையில் தட்டிக் கொடுங்கள்.

 • உங்கள் முகத்தை அவர்கள் பார்ப்பதையும் அவர்களின் கவனத்தைக்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும் உறுதி செய்யுங்கள்.

 • பயமுறுத்துவது போல் தோன்றும் எதையும் தவிர்க்கவும் – எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு ஈடாக உட்காருதல் பொதுவாகச் சிறந்தது.

தொடர்பாடல் சூழலை அடிப்படையாகக் கொண்டிருக்கும். பின்னணி இரைச்சலோ பிற கவனத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகளோ  தொடர்பாடலைச் சிரமமாக்கலாம்.
 • நீங்கள் வாழ்பவர்களிடம்  பேசும்போது அவர்களுக்குக் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கலாம், எனவே, குறைந்த அளவு கவனச்சிதைவு உள்ள அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்
 • தேவைப்பட்டால் தொலைக்காட்சியையோ வானொலியையோ முடக்குவதோடு  குறுக்கீடுகளைத் தடுக்க முயலவும்.
 • வெளிச்சத்தைப் பற்றியும் யோசியுங்கள். பொருள் தருகிற காட்சி குறிப்புகளைப் புரிந்துகொள்ளும் வகையில் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் தெளிவாகக் பார்க்க முடிகிறதா?
 • இயன்றவரை பதற்றத்தைக் குறைக்கக் கூடிய பழக்கமான அல்லது வசதியான சூழலில் அவர்களை வைத்திருங்கள். அவர்கள் எங்கு மிகவும் வசதியாக இருப்பர் என்பதைக் கேளுங்கள்.

வெளிப்படையான பாதிப்பை ஏற்படுத்தாத சூழலைப் பற்றி அதிகமாகக் கவலைப்படும் நிலைதான் பதற்றம் ஆகும். டிமென்சியா உடையவர்களுக்கு இது வழக்கமானதாகும், குறிப்பாகத் தொடக்க நிலையில், இது சிக்கல்களின் முதல் அறிகுறியாக இருக்கக்கூடும். டிமென்சியா உடையவர்கள், பதற்றம் என்பது அவர்களுடைய நிலையைப் பற்றிய குறிப்பிட்ட கவலைகளோடு தொடர்புடையதாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக அதிகரிக்கும் மறதி, அல்லது பிற அடிப்படையற்ற, தனிப்பட்ட விசயங்களோடு தொடர்புபடுத்துவதாக இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் எந்தத் தெளிவான தூண்டுதல்களும் இல்லாமல் போகலாம்.

 • அவர்களுடன் பேச சரியான நேரத்தைத் தேர்வு செய்யுங்கள் – நீங்கள் விவாதிக்கும்  கருத்துச் சிக்கலானதாக இருந்தால் அவர்கள் தணியும் வரை காத்திருங்கள்.

 • என்ன செய்கிறீர்கள் என்பதையும், ஏன் செய்கிறீர்கள் என்பதையும் அவர்களுக்கு விளக்குங்கள் – இதைத் தெளிவுப்படுத்தாமல் யாரோடும் எந்தப் பணியையும் தொடங்காதீர்கள். எவ்வித விளக்கமும் இல்லாமல் யாரோ உங்கள் ஆடைகளைத் திடீரென்று கழற்றினால்  எவ்வளவு மன அழுத்தமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

 • அவர்கள் துலங்காவிட்டாலும் டிமென்சியா உடையவர்கள் மிகவும் கடினமான தலைப்புகளைப் பற்றி பேசாதீர்கள். இது பெரும்பாலும் அவர்களின் புரிதல் திறனைக் குறைத்து மதிப்பிடுவதோடு பண்படுத்துவதாகவும் மேம்படுத்துவதாகவும் அமையாது.

 • மெதுவாகப் பேசுங்கள், அமைதியான தொனியைப் பயன்படுத்துவதோடு தணிந்தும் சாந்தமாகவும் இருங்கள். பொறுமையாய் இருங்கள்.  இயன்ற வரை நகைச்சுவை உணர்வோடு இருங்கள்.

 • உறுதியளிக்கும் சைகைகளைப் பயன்படுத்துங்கள். ஒருவரின் கையைப் பிடிப்பது உதவலாம்.

 • எது அவர்களைத் தணியச் செய்யும் என்பதை அறியுங்கள்: தோட்டம் போடுதல், சமைத்தல்,  தேநீரைப் பகிர்ந்து குடித்தல். பெரும்பாலும் பாடுவதும், இசை கேட்பதும் உதவலாம்.

 • அவர்களுக்குத் தேவைப்படும் போது இடைவெளி கொடுங்கள்.

டிமென்சியா உடையவர்களின் அனுபவத்தோடு ஒத்து போகின்ற உங்கள் அனுபவத்தைச் சிந்தித்துப் பார்ப்பது பெரும்பாலும் உதவும்: விளங்காத நிலை, நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்தில் பயம் அல்லது என்ன செய்கிறீர்கள் என்ற தெளிவற்ற நிலை, ஒருவேளை நீங்கள் புதிய இடத்தில் சோர்வாகவோ பயவுணர்வுடனோ இருப்பதற்கு வழிவகுக்கும்.

 • நீங்கள் யாரையாவது புரிந்துகொள்வதில் சிக்கல் எதிர்நோக்கி இருந்தால், அவர்களைப் பற்றியும் அவர்களுடைய ஆளுமை பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் நடவடிக்கைகளைப் பற்றி பேசுகிறார்களா? அவர்களுக்குப் பசியோ சோர்வோ பதற்றமோ ஏற்பட்டால் பெரும்பாலும் அவர்கள் பிறரிடம் சொல்கிறார்களா?
 • அவர்கள் தடுமாற்றமாகவோ குழப்பும் முறையிலோ பேசினால், சேர்த்துப் பார்க்கும்போது பெரும்பாலும் அது அர்த்தத்தைக் கொடுக்கும். அடிப்படையில் நீங்கள் யாரும் நினைக்காத ஒரு பொருளுக்குச் சில வேளைகளில் தெளிவான அர்த்தத்தைக் கொண்டு வரும்.
 • நீங்கள் எந்தளவு முடியுமோ அந்தளவு தணிந்த மனநிலையில் இருந்து பேசுகின்ற நபரையும் தணிந்த மனநிலையில் இருக்க உதவுங்கள்.
 • மக்களின் நடத்தையில் அறிகுறிகளைக் கவனித்து, அவர்கள் என்ன கருதுவார்கள் என்பதனை உணர முயலுங்கள்.
 • நாம் எப்போதும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டிருக்கிருக்கிறோம் என்பதை விளக்குவதற்கு இயலாது என அறிவோம். சில வேலைகளில் நீங்கள் இதைத் தவறாகப் புரிந்து கொள்வீர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
 • உங்களால் புரிந்துகொள்ள முடியாத சூழலிலும் உதவ இயலாத நிலையிலும் முடிந்தால், உதவக்கூடிய மற்றவரைக் கண்டறியவும்.
 • உங்கள் தொடர்பாடலில் மகிழ்ந்திருப்பதோடு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

நம் கருத்துகளை முழுமையாகப் பெறுவதற்காகவும் மக்களைக் கவருவதற்காகவும் நாம் தொடர்புகொள்கிறோம். நாம் கூற வரும் நோக்கமும் டிமென்சியா உடையவர்களின் புரிதலும் வேறுபட்டு இருப்பதால் அவர்களிடம் தொடர்புகொள்ளும்போது தடை ஏற்படலாம்.  தப்பான அடையாளத்தைத் தேர்வு செய்வதாலோ கவனக் குறைவுடன் முரணான நோக்கங்களாலோ குடும்ப உறுப்பினர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும்  பயமோ அழுத்தமோ ஏற்படும்.

 • நீங்கள் கடினமென நினைக்கும் நடத்தைகளைப்பற்றி முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். இது அழுத்தத்தின் வெளிப்பாடாக அமையும்.
 • பயனற்ற நடத்தை எதுவாக இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, ஏமாற்றத்தினால் வரும் கோபம், உடல் நலமின்மை அல்லது அதிருப்தி ஆகியவை ஆகும். பயனற்ற நடத்தையாக இருந்தாலும் அதனை விளக்குவதற்கும் தீர்வு காண இயலாது போனாலும் பொதுவாக ஏதாவது பொருளுள்ளவையாக அமைந்திருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.
 • நிறைவேறாத தேவை உண்டா? சில வழிமுறைகளை வழங்கி அடையாளங்கான முயற்சி செய்க.
 • பயனுடைய குறுக்கீட்டைக் கண்டறியலாமா?
 • யாரோ ஒருவர் போல் நீங்கள் நடத்தப்படுவதற்குத் தயாராக இருங்கள். (எடுத்துக்காட்டாக உறவினர்களைத் தவறாக அடையாளம் காணுதல்)
 • நீங்கள் வெறுப்படைந்தால், அங்கிருந்து வெளியேறுவதற்கோ வேறொருவர் உதவுவதற்கோ கண்டறிய தயாராக இருங்கள். கோபப்படாதிருக்க முயலுங்கள்.

டிமென்சியாவின் உடையவர்களின் இறுதி காலகட்டத்தில் உள்ளவர்கள் பொதுவாகத் தங்கள் சுய அடையாளத்தை இழப்பர். பெயரையும் சூழல்களையும் கூறிக்கொண்டிருப்பது பயன்மிக்க நினைவுறுத்தலாக இருக்கும்.

என்ன நடக்கிறது என்பதையும் அதனை ஏன் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அவசியத்தையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்துவதோடு பதற்றத்தையும் குறைக்க வேண்டும். இது நடவடிக்கைகளைச் சுலபமாகவும் அர்த்தமுள்ளதாகவும் விளங்கக்கூடிய சூழலை உருவாக்குகிறது. அவர்கள் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் அவர்களின் இந்த மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவிடுங்கள்.

 • எப்பொழுதும் அவர்களுக்குரிய மரியாதையைக்  கொடுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
 • அவர்கள் மோசமாக நடந்து கொண்டாலும் அவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல. அவர்கள் முடிவு எடுக்க வாய்ப்பளியுங்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சுதந்திரத்தைக் கொடுங்கள்.
 • தேவைப்படும் போது உலகத்தில் வாழும் மனிதர்களை நினைவூட்டுங்கள், ஆனால் நீங்கள் கூறும் உண்மை தேவையற்றதாகவோ  புண்படுத்துவதாகவோ இருந்தால் அவர்களிடம் திணிக்காதீர்கள்.
 • அவர்கள் எதை விரும்பி செய்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து அதைச் செய்ய அவர்களுக்கு உதவுங்கள். அவர்களின் பின்னணியைத் தெரிந்து கொள்வது இயல்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் – ஆனால் அவர்கள் எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்க வேண்டாம்!
 • அவர்களுக்குப் பயனான நடவடிக்கைகளைக் கண்டறிக. அவர்களுக்கு உதவியாகவும் அவர்களோடு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் தங்கள் சிக்கல்களை  மறக்க செய்யும் போதும் பெரும்பாலோர் விரும்புகிறார்கள். சலிப்படைதலை எவரும் விரும்புவதில்லை. பழைய பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மீண்டும் விரும்புவர்.
 • நினைவு மலர் (புகைப்படங்கள், அஞ்சல் அட்டை, செய்தித்தாள் துண்டுகள் போன்றவை) கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு உதவுகின்ற வழிகாட்டியாக இருக்கலாம், இது அவர்கள் தணிந்திருக்கவும் தங்கள் வாழ்க்கையுடன் இணைக்கவும் உதவுகிறது.
 • அவர்களுக்குரிய இடத்தைத் தனிப்பட்டதாக்கிக் கொள்ள வாய்ப்பளியுங்கள். அவர்களுக்கு நன்கு அறிமுகமானதும் நம்பிக்கை தருவதுமான படங்களையோ பொருள்களையோ அணுகுவதற்கான சூழல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
 • அவர்கள் கவலையாக இருக்க விரும்பினால் அப்படியே இருக்கட்டும்- சில வேளைகளில் இது இயல்புதான். அவர்களுக்கு எப்போது உதவ வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லும்.

பேசும் தலைப்புக்குப் பொருத்தமற்ற கருத்துகளைப் பேசுவதோ தொடர்பாடலின் சூழலுக்குப் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதோ டிமென்சியா உடையவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும்.

புரிந்துகொள்வதற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒரு நபரின் நோக்கங்களையும், அர்த்தத்தையும் புரிந்துகொள்வதை எளிதாக்குகிறது. மேலும் டிமென்சியா உடையவர்கள் தொடர்புகொள்வதற்கு ஏற்படும் சிக்கல்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதோடு ஒன்றிணைந்து செயல்படும்போது இடைவெளியைக் குறைக்க உதவும்.

 • கலந்துரையாடலில் ஒரே அர்த்தத்தை மையமாகக் கொண்டு செயல்படுங்கள். 

 • சில நேரங்களில் அறிகுறிகளைத் தேட உதவுகிறது. கனிவாக இருங்கள் – தொடர்பாடலில் மகிழ்ச்சியாக ஈடுபடுங்கள்.

 • உங்களை விரக்தியடையச் செய்யும் கடுமையான முயற்சி எதுவும் செய்யாதீர்கள். கூறப்படும் ஏதாவது ஒரு கருத்தின் பொருளைக் கண்டறிய முடியாவிட்டால் விட்டு விடுங்கள் ஆனால் மீண்டும் முயற்சிக்க தயாராக இருங்கள்.

 • அர்த்தத்தைச் சரியாக நீங்கள் புரிந்து கொண்டால் அவர்களைக் கேளுங்கள்.

டிமென்சியா உடையவர்களைப் பராமரிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர்களை நேசிப்பவர்களுக்கும்  இது ஒரு முக்கியமான ஆலோசனை.

வெகு சிலரே வெளிப்படையான பதற்றத்தையும் துன்பங்களையும் அனுபவிக்காமல் டிமென்சியா உடையவர்களாக இருக்கிறார்கள். அது போலவே வெகு சில பராமரிப்பாளர்களுக்கே அனைத்துச் செயற்பாங்குகளும் எந்தவொரு தடையுமின்றி இயல்பாக அமையும் சூழல் ஏற்படுகிறது.

எப்படி இருப்பினும் நம்மில் பெரும்பாலோருக்கு உதவி தேவைப்படுகிறது.

 • இயன்றால், நீங்கள் ஓய்வெடுக்க சிறிது நேரம் இருப்பதை உறுதி செய்யுங்கள் – ஒரு வாரத்தில் சில மணிநேர ஓய்வு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

 • எங்கு முடியுமோ அங்கு ஆலோசனை பெறுங்கள்.

 • நண்பர்களிடம் பேசுங்கள்.

 • இக்கட்டான சூழல்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்காதீர்கள்.

Close Menu